சுவிஸில் அகதிகளுக்கான உளவியல் மருத்துவம் முறையாக வழங்கப்படுகிறதா?

Report Print Harishan in சுவிற்சர்லாந்து
107Shares
107Shares
ibctamil.com

சுவிஸில் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு போதிய உளவியல் மருத்துவம் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து போர் மற்றும் சித்ரவதைக்கு ஆளானவர்களை பாதுகாக்கும் சூரிச் அமைப்பின் இயக்குனர் Matthis Schick கூறுகையில், சுவிட்சர்லாந்தில் அகதிகளாக குடியேறுபவர்களில் பெரும்பாலானவர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது எட்டு வருடங்களுக்கு பின்னரே உளவியல் மருத்துவம் வழங்கப்படுகிறது, பெரும்பாலான அகதிகள் தங்களின் கடந்த கால வரலாற்றை நினைவுபடுத்தி கூறுவதற்கு மிகவும் தயங்குகின்றனர்.

குறிப்பாக பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளான பெண்கள், அதனை கூறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர், அப்படியே கூற நினைத்தாலும் அவர்களுக்கு மொழி ஒரு தடையாக உள்ளது என கூறியுள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மன உலைச்சலுக்கு ஆளான அகதிகளுக்கு மருத்துவ உதவி வழங்கிட சுவிஸில் போதிய வசதி இல்லை என தெரியவந்தது.

இதனால் வருடக்கணக்கில் அகதிகள் சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

மொழி ஒரு தடையாக அமைந்து விடும் அகதிகளுக்கு பெரும்பாலும் மொழிபெயர்ப்பாளர்கள் இலவசமாக உதவுவதாகவும் Matthis கூறியுள்ளார்.

மேலும், மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட தவறினால் ஒரு பெண்ணின் கர்ப்பம் தவறுதலாக கலைக்கப்பட்டு விட்டதாக Matthis கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்