சுவிட்சர்லாந்தில் அதிர்ச்சி: 26 மில்லியன் யூரோக்கள் திருட்டு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
555Shares
555Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தில் கொள்ளை கும்பலொன்று 26 மில்லியன் யூரோக்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் SOS Surveillance என்னும் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் பாதுகாப்பு வாகனங்களில் பணத்தை வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எடுத்துச் செல்வது வழக்கம்.

இத்தகைய வான் ஒன்றில் டிரைவராகப் பணிபுரியும் ஒருவர் பணத்துடன் பிரான்சு- சுவிஸ் எல்லைக்கருகே சென்றுகொண்டிருக்கும்போது அவருக்கு போன் கால் ஒன்று வந்தது.

அதில் அவரது மகள் பேசினார், வீட்டில் பிளம்பர்கள் போல் வந்த சிலர் தன்னைக் கடத்தி வைத்திருப்பதாகவும் வானில் உள்ள பணம் முழுவதையும் அவர்களிடம் ஒப்படைத்தால்தான் தன்னை உயிருடன் விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பயந்துபோன வான் டிரைவர் கொள்ளையர்கள் சொன்ன இடத்திற்கு வேனை ஓட்டிச் சென்றார். அங்கு தயாராக நின்ற, முகமூடிகளும் கையுறைகளும் அணிந்த கொள்ளையர்கள் பணம் முழுவதையும் Porsche SUV கார் ஒன்றில் ஏற்றிக்கொண்டு தப்பிச்சென்றனர்.

கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த டிரைவரின் மகள் சாலையோரமாக கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.

பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாராகிலும் இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்