சூரிச்சில் அகதிகள் தொடர்பில் பரவும் வதந்தி: எச்சரித்த பாதுகாப்புத்துறை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
292Shares
292Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அகதிகள் தொடர்பில் பரவும் தகவலை கருத்தில் கொள்ளவேண்டாம் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சூரிச் நகரில் கடந்த சில நாட்களாக துண்டுப் பிரசுரம் ஒன்று பலரது குடியிருப்பு வாசலிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சூரிச் மாகாணத்தின் பாதுகாப்பு தலைவரிடம் இருந்து வெளியாகியுள்ளதாக கூறப்படும் அந்த துண்டுப் பிரசுரத்தில், சுவிஸ்ஸில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகளை குடிமக்கள் ஆதரித்து, அவர்களுக்கு தங்கள் குடியிருப்பின் அடித்தளத்தில் குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இதன்மூலம் வருவாய் ஈட்ட முடியும் எனவும், அகதிகளிடம் இருந்து மிக குறைந்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனவும் அந்த பிரசுரத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த விளம்பரமானது போலி எனவும், குடிமக்கள் எவரும் நம்ப வேண்டாம் எனவும் பாதுகாப்புத்துறை குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், குடிமக்கள் அந்த விளம்பரங்களை நிராகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்