சுவிஸ் தலைநகரில் அதிகரிக்கும் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

பெர்ன் நகரில் வாடகை குடியிருப்புகளில் அதிகமும் பாலியல் தொழிலாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் பாலியல் தொழிலை அரசே அங்கீகரித்துள்ளது மட்டுமின்றி, பதிவு செய்த பாலியல் தொழிலாளர்கள் வரியும் செலுத்தி வருகின்றனர்.

தலைநகர் பெர்னில் 28 உரிமம் பெற்ற விபச்சார விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் சமீப காலமாக தலைநகரில் அதிகரிக்கும் பாலியல் தொழிலாளர்களால் வாடகை குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வருவாய் கொட்டுகிறது.

பெர்னில் மட்டும் 12 வாடகை குடியிருப்புகளில் பாலியல் தொழில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும் ஒருசாரார் தெரிவிக்கின்றனர். பொதுவாக உரிமம் பெற்ற விபச்சார விடுதிகளில் அறை ஒன்றுக்கு ஒருநாள் வாடகையாக 100 முதல் 150 பிராங்குகள் வரை ஈடாக்கப்படுகிறது.

ஆனால் தனியார் வாடகை குடியிருப்புகளில் இந்த கட்டணம் மிக குறைவு என கூறப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்றபோதும் இது ஒவ்வொரு மாகாணத்திலும் சட்டங்கள் வேறுபடுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers