வெளிநாட்டில் கடற்கரைக்கு சென்ற சுவிஸ் குடிமகனுக்கு நேர்ந்த சோகம்: வெளியான பின்னணி

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த சுவிஸ் குடிமகன் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் உள்ள கடற்கரைக்கு சுவிட்சர்லாந்தை சேர்ந்த 60 வயதான முதியவர் வந்தார்.

இந்நிலையில் அந்த முதியவரை காணவில்லை என பொலிசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீச்சல் விரர்கள் உதவியுடன் முதியவரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சுயநினைவின்றி குறித்த முதியவர் கடலில் இருந்து மீட்கப்பட்டார்.

அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டும் உயிரை காப்பாற்ற முடியவில்லை. சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers