சுவிட்சர்லாந்து மக்களை புத்தாண்டிலும் விடாமல் துரத்தும் பூதங்கள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

அரசியல் பூதங்கள் சில தற்போதைக்கு அமைதியாக இருப்பதுபோல் தோன்றினாலும், 2019இலும் அவை மக்களை விடாது துரத்தும் என்றே தோன்றுகிறது.

2018இல் பல்வேறு முக்கிய அரசியல் திட்டங்கள் முடிக்கப்படாமலே உள்ளன.

அவை நிச்சயம் மீண்டும் 2019இலும் மக்களை தொந்தரவு செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அவை என்ன என்று பார்க்கலாம்.

ஓய்வூதியம் மற்றும் வரி வசூலிப்பு தொடர்பில் மாற்றங்கள்

2018இல் இரண்டுமுறை வரி வசூலிப்பில் மாற்றங்கள் முயற்சி செய்யப்பட்டன, இரண்டும் தோல்வியடைந்தன. சில மாதங்களுக்குப்பின் அரசு கொண்டு வர முயன்ற 2020 ஓய்வூதிய திட்டங்களையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இப்போது அரசு மீண்டும் அவை இரண்டையும் சேர்த்து, பார்ப்பதற்கு நல்ல திட்டம் போல் காட்டி மீண்டும் கொண்டு வர முயல்கிறது.

சீதோஷ்ண மாற்றம் தொடர்பான வாக்கெடுப்பு

சீதோஷ்ண மாற்றம் தொடர்பான மசோதா மீது பல நாட்கள் விவாதம் நடைபெற்றது. வலது சாரியினரும் இடது சாரியினரும் மாறி மாறி பல திட்டங்களை முன் வைத்தனர்.

எப்படி எங்கு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாவதைக் குறைப்பது என்பது குறித்து விவாதங்கள் நடந்தன. இதுவரை உருப்படியாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் மீண்டும் 2019ஆம்ஆண்டு அதே மசோதா செனேட்டுக்கு செல்லும், மீண்டும் முதலிலிருந்து விவாதங்கள்தொடங்கும்!

ஜுரா பிரச்சினை

2017அம் ஆண்டு ஜூன் மாதம், 137 என்னும் சிறு எண்ணிக்கையிலான மெஜாரிட்டி வாக்குகளால், தற்போது ஜேர்மன் மொழி அதிகம் பேசப்படும் பகுதியாகிய Bernஉடன்இருக்கும், பிரெஞ்சு மொழி பேசும் நகரமான Moutier நகரம், பிரெஞ்சு மொழி பேசும்பகுதியான Juraவுடன் இணைக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் அந்த முடிவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. அந்த முடிவை எதிர்த்து Moutier முனிசிபல் கவுன்சில் மேல் முறையீடு செய்துள்ளதால் வழக்கு 2019இலும் தொடரும்.

தொடரும் மருத்துவக் காப்பீடு கட்டண உயர்வுகள்

அதிகரித்து வரும் மருத்துவ செலவுகளால், இன்சூரன்ஸ் பிரீமியங்களும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

மக்கள் தங்கள் பிரீமியம் உயருமா என்று யோசிப்பதை விட்டு விட்டு, எவ்வளவு உயரும் என்று எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். கட்டண உயர்வை நிறுத்துவது அல்லது, இன்சூரன்ஸ் பிரீமியங்களை குறைப்பது தொடர்பாக நான்கு initiativeகளை மக்கள் முன் வைத்திருக்கிறார்கள், சில ஏற்கனவே கையெழுத்து பெறப்பட தொடங்கியாயிற்று.2019இல் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அணுக்கரு உலை என்னும் பெரிய பூதம்

சுவிஸ் மக்களை மிக நீண்ட காலமாக அச்சுறுத்தி வந்த அணுக்கரு உலை என்னும் பூதம் கல்லறைக்கு சென்று விடும் என்றே தோன்றுகிறது.

அதாவது, Mühlebergஇல் உள்ள அணுக்கரு உலை இந்த ஆண்டு டிசம்பர் 20 அன்று மூடப்பட இருக்கிறது. 2030வாக்கில் அணு உலை முற்றிலும் கலைக்கப்படும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers