வெளிநாட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட சுவிஸ் இளைஞர்கள்: நீடிக்கும் மர்மம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

ஸ்வீடனில் கடந்த சனிக்கிழமை அன்று சுவிஸ் இளைஞர்கள் சிலர் சாலை விபத்தில் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் மர்மம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்வீடனின் Masugnsbyn பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சுவிஸ் இளைஞர்கள் எழுவர் படுகாயமடைந்தனர்.

குற்றுயிராக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எழுவரில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பிய நிலையில் எஞ்சிய ஆறு பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள், குறித்த விபத்து நடந்த போது அப்பகுதி மக்கள் அல்லது அதுவழியாக பயணித்த எவரும் நேரிடையாக பார்த்ததில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதனால் சுவிஸ் இளைஞர்கள் 6 பேர் கொல்லப்பட்ட இந்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் இந்த விவகாரம் மர்மமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த பேரழிவை ஏற்படுத்திய விபத்தில் இதுவும் ஒன்று என சுட்டிக்காட்டும் உள்ளூர் பத்திரிகைகள் இந்த விபத்து தொடர்பில் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

Masugnsbyn பகுதியில் அதிகாலையில் சுவிஸ் சுற்றுலா பயணிகள் எழுவர் சென்ற சிற்றூந்து ஒன்று லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதில் லொறி ஒட்டுனரும் சுற்றுலா பயணிகளில் ஒருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் திட்டமிட்ட படுகொலை அல்ல என்பதால் குற்றவியல் நடவ்டிக்கை ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இருப்பினும் விசாரணையை பொலிஸ் அதிகாரிகள் பல கோணத்தில் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரத்தில் திறமையான அதிகாரிகளை களமிறக்கியுள்ளதாகவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுவீடன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்