Brexitக்கு பின் சுவிட்சர்லாந்துடன் இணைவோம்: பிரித்தானியா அதிரடி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பிரெக்சிட்டில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, திடீர் திருப்பமாக, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி, சுவிட்சர்லாந்தின் 27ஆவது சுய இறையாண்மை கொண்ட மாகாணமாக இணைய இருப்பதாக சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், பிரித்தானிய அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர், சுவிட்சர்லாந்து ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகளையும், தனக்கென்று தனி வர்த்தக கொள்கை ஒன்றையும் வைத்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சரியான மாற்றாக சுவிட்சர்லாந்து இருக்கும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுவிட்சர்லாந்தில் ஆங்கிலமும் ஒரு அரசு மொழியாக்கப்படும். சுவிஸ் குறித்த பாடங்கள் பிரித்தானிய பாடத்திட்டத்தில் இணைக்கப்படும்.

இதற்கிடையில், சுவிஸ் தரப்பில், இது சாத்தியம்தான் என்றும், இந்த கோரிக்கையை முன்வைக்கும்முன், ஒரு வாக்கெடுப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை ஒரே மாகாணமாக இணைத்துக் கொள்வதா, அல்லது, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து என தனித்தனி மாகாணங்களாக இணைப்பதா என்பது குறித்தும் சுவிட்சர்லாந்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

அடுத்த மாதம் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இன்று ஏப்ரல் 1 என்பதால் மக்களை முட்டாளாக்குவதற்காக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers