உரிமையாளரைத்தேடும் ஆமை, உதவும் பொலிசார்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சூரிச்சில் தொலைந்த ஆமை ஒன்றை கண்டுபிடித்துள்ள பொலிசார் அதன் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

சூரிச் நகரில் பொலிசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது பாதசாரி ஒருவர், அவர்களது காரை நிறுத்தியிருக்கிறார்.

சாலை ஒன்றில் ஆமை ஒன்றைக் கண்டெடுத்தாக தெரிவித்த அவர், அந்த ஆமையை பொலிசாரிடம் ஒப்படைத்தார்.

பொலிசார் அந்த ஆமையைக் குறித்து விளம்பரம் வெளியிட்டும் யாரும் அதை உரிமை கோரி இன்னும் வரவில்லை.

அந்த ஆமை 22 சென்றிமீற்றர் நீளமும் 6 சென்றிமீற்றர் உயரமும் கொண்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers