சுவிட்சர்லாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம்: சிக்கிய ஆதாரம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பேஸல் துறைமுகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள எரிபொருள் கலன்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த ஐ.எஸ் அமைப்பு திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பிரபல சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிரிய போரின்போது ஐ.எஸ் அமைப்பினர் விட்டுச் சென்ற ஹார்ட் டிஸ்க் ஒன்றில், பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் ஒன்றை நடத்தும் திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்கள் அடங்கிய கோப்புகள் கிடைத்துள்ளன.

தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் புகைப்படமும் அந்த டிஸ்கில் இருந்துள்ளது.

ஐ.எஸ் தலைவரான Abu Bakr al-Baghdadiக்கு எழுதப்பட்டு ஆறு ஐ.எஸ் தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட ஒரு கடிதமும் சிக்கியுள்ளது.

அந்த கடிதத்தில், வாகனங்களைக் கொண்டு மோதுதல், வங்கிகளைக் கொள்ளையடித்தல், கணினிகளை ஹேக் செய்தல் மற்றும் ஐரோப்பாவில் முக்கிய பிரமுகர்களைக் கொல்லுதல் ஆகியவற்றிற்கான திட்டம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எதனால் பேஸல் தாக்குதல் நிகழ்த்தப்படவில்லை என்பது தெரியவில்லை. அத்துடன் அந்த ஆவணங்களில் ஜேர்மனியின் அதிவேக ரயில்களில் தாக்குதல் நடத்தும் மற்றொரு திட்டமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த கடிதம் கிடைத்த குறுகிய காலத்திற்குள் பெர்லினிலுள்ள ரயில் பாதைகளின் அருகே ஐ.எஸ் கொடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதோடு, ரயிலுக்கு மின்சாரம் வழங்கும் ஒயர்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்