பிளேபாய் இதழுக்காக ஆபாச புகைப்படம்... சதியில் சிக்கிய சுவிஸ் இளம்பெண்: பிரபல புகைப்படக் கலைஞருக்கு சிறை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பிளேபாய் இதழுக்காக ஆபாச புகைப்படங்களை பதிவு செய்வதாக கூறி சுவிஸ் இளம்பெண்ணை பாலியல் உறவுக்கு நிர்பந்தித்த புகைப்படக்கலைஞர் சிக்கியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருக்கும் 52 வயதான புகைப்படக் கலைஞரே இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளார்.

குறித்த நபரால் ஏமாற்றப்பட்ட பல இளம்பெண்களில் சுவிஸ் இளம்பெண்ணும் ஒருவர் என தெரியவந்துள்ளது.

பேஸ்புக் மூலம் அறிமுகமான அந்த 24 வயது இளம்பெண்ணிடம் நிர்வாண புகைப்படங்களுக்காக 12,000 பிராங்குகள் வரை ஊதியமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.

பிளேபாய் மாத இதழ் என்பதால் அந்த இளம்பெண் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த புகைப்படக் கலைஞரின் குடியிருப்பில் அமைந்துள்ள பிரத்யேக அறையில் புகைப்படப் பதிவு நடைபெற்றுள்ளது.

திடீரென்று அந்த நபர் குறித்த பெண்ணின் அந்தரங்கப்பகுதியில் கை வைத்துள்ளார். மேலும் பாலியல் உறவுக்கும் நிர்பந்தித்துள்ளார்.

மட்டுமின்றி, புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் முயன்றுள்ளார்.

இதை கடுமையாக எதிர்த்த இளம்பெண், அவரை திட்டவும் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படக் கலைஞர் இதேப் போன்று சுமார் 30 வழக்குகளில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் பலமுறை அவர் கைதாகி சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அவருக்கு 20 மாதங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்