மின்சார ரயில் மீது ஏறிய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில், நின்றுகொண்டிருந்த மின்சார ரயிலின்மீது ஏறிய ஒரு சிறுவன் மின்சார ஒயர் மீது கைபட்டதால் மின்சாரம் தாக்கி கொல்லப்பட்டான்.

வலாயிஸ் பகுதியில் வசிக்கும் அந்த 15 வயது உள்ளூர் சிறுவன் Le Châble ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ரயிலின்மீது ஏறினான்.

அப்போது ரயிலுக்கு மேல் இருந்த மின் ஒயரில் அவனது கைபட்டது. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அந்த சிறுவன், படுகாயமடைந்து Sion மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்