சுவிஸில் நடந்த துயரம்: தாயார் மற்றும் மகன் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருவரது சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனீவா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வெள்ளியன்று பொலிசார் பெண் உள்ளிட்ட இருவரின் சடலங்களை மீட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறில் இருவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.

இருப்பினும் குற்றவாளி தொடர்பில் எந்த தடயமும் சிக்காத நிலையில், விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்தி நாளேடு ஒன்றில், கொல்லப்பட்ட இருவரும் தாயார் மற்றும் மகன் எனவும்,

கொலை செய்து தப்பியவர் அந்த பெண்ணின் கணவர் எனவும் உறுதிப்படுத்தாத தகவலை வெளியிட்டுள்ளது.

4 பேர் கொண்ட அந்த குடும்பமானது கடந்த ஒரு மாதம் முன்னரே ஜெனீவா நகருக்கு குடிபெயர்ந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஜெனீவா பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers