சுவிட்சர்லாந்தின் எந்த மாகாணத்தில் குடியுரிமை பெற குறைந்த கட்டணம் செலுத்தினால் போதும்?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
338Shares

சமீபத்திய ஆய்வு ஒன்று சுவிட்சர்லாந்தின் எந்த மாகாணத்தில் குடியுரிமை பெறுவதற்கு குறைந்த கட்டணம் செலுத்தினால் போதும், எந்த மாகாணத்தில் குடியுரிமை பெற அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்னும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஆம், சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரையில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் என்பது, மாகாணத்திற்கு மாகாணம் மாறுபடும்.

அந்த ஆய்வின்படி, லாசேனில் குடியுரிமை பெறுவதற்கு நீங்கள் 800 ஃப்ராங்குகள் செலுத்தினால் போதும்.

அதில் ஃபெடரல் கட்டணம் 100 ஃப்ராங்குகள், மாகாண கட்டணம் 450 ஃப்ராங்குகள், உள்ளூர் கட்டணம் 250 ஃப்ராங்குகள், ஆக மொத்தம் 800 ஃப்ராங்குகள்.

அதே நேரத்தில் Schwyz மாகாணத்தில் குடியுரிமை பெற 3,600 ஃப்ராங்குகள் செலுத்த வேண்டும்.

அதில் ஃபெடரல் கட்டணம் 100 ஃப்ராங்குகள், மாகாண கட்டணம் 500 ஃப்ராங்குகள், உள்ளூர் கட்டணம் 3,000 ஃப்ராங்குகள், ஆக மொத்தம் 3,600 ஃப்ராங்குகள்.

அதாவது, பொதுவாகக் கூறினால், பிரெஞ்சு மொழி மற்றும் இத்தாலிய மொழி பேசும் சுவிட்சர்லாந்து மாகாணங்களில் கட்டணங்கள் குறைவு, ஜேர்மன் மொழி பேசும் மாகாணங்களில் கட்டணம் அதிகம், ஒரே விதிவிலக்கு ஜேர்மன் மொழி பேசும் Appenzell Ausserrhoden மாகாணம்.

இதுபோக, சில மாகாணங்களில் குடியுரிமை வகுப்புகளுக்கு ஒரு கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும்.

எல்லாவற்றையும் தாண்டி, குடியுரிமை பெற்றுவிட்டாலே உங்களுக்கு சுவிஸ் பாஸ்போர்ட் கிடைத்து விடாது.

அதற்கான ஆவணத்திற்காக மட்டுமே பெரியவர்களுக்கு 140 ஃப்ராங்குகள் செலுத்த வேண்டிவரும் நிலையில், ஒரே நேரத்தில் பாஸ்போர்ட்டும் அடையாள அட்டையும் பெற விரும்பினால், அதற்கு 148 ஃப்ராங்குகள் செலுத்த வேண்டும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்