சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் தலைநகருக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகள், நீந்தும்போது ஆற்று நீரைக் குடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், சுவிட்சர்லாந்து சுற்றுலா இணையதளங்களில், பெர்னிலுள்ள Aare நதியின் தண்ணீரை அப்படியே குடிக்கலாம், அது அவ்வளவு பாதுகாப்பானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆகவே அதை நம்பி ஆற்று நீரைக் குடிக்க வேண்டாம், அப்படி குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும் என அரசு அறிவித்துள்ளது.

Aare ஆற்றிலுள்ள நீர் மிக தூய்மையானதுதான், ஆனால் குடிக்கும் அளவிற்கு அல்ல.

காரணம், சமீபத்தில் பெய்த மழையின்போது வெள்ளம் பெருகியதில் நகரிலுள்ள சாக்கடைகள் பல நிரம்பி நதியில் போய் சேர்ந்துள்ளதால், ஆற்று நீரில் மனிதக் கழிவு கலந்திருப்பதாகவும், அதனால் அதைக் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆறின் நீரைக் குடிப்பது உடல் நலனுக்கு தீங்கை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள உள்ளூர் மருத்துவர் ஒருவர், ஆனால் ஆற்றில் நீந்தும்போது தற்செயலாக வாய்க்குள் போய்விடும் ஒரு வாய் தண்ணீரால் பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்