ஆபாச வலைதளத்தில் வெளியான சுவிஸ் ஹொட்டல் குளியலறை காட்சிகள்: அதிர்ச்சியில் பெண்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் வோட் மண்டலத்தின் பிரபல ஹொட்டல் ஒன்றில் பெண்களின் குளியலறை காட்சிகளை பதிவு செய்து ஆபாச வலைதளத்தில் வெளியிட்ட நபர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

மொத்தமாக இவர் 512 காணொளி காட்சிகளை ஆபாச வலைதளத்தில் பதிவேற்றியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வோட் மண்டலத்தில் செயல்பட்டுவரும் கிராண்ட் ஹொட்டலில் உள்ள பெண்களுக்கான குளியல் அறை, உடைமாற்றும் அறை மற்றும் ஸ்பா உள்ளிட்ட இடங்களிலேயே அந்த நபர் ரகசிய கமெராக்களை பொருத்தி இருந்துள்ளார்.

சில காணொளி காட்சிகளில் இவரது ரகசிய உறுப்பை பெண்கள் தொடுவதாகவும் அமைந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பதிவு செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் சிக்கிய பல பெண்களும் தாங்கள் ரகசிய கமெராவால் கண்காணிக்கப்படுகிறோம் என்பதே அறியவில்லை என கூறகின்றனர்.

இந்த விவகாரம் வெளியான நிலையில் சம்பவம் நடந்த காலகட்டத்தில் குறித்த ஹொட்டலில் தங்கியிருந்த பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆபாச வலைதளங்களில் அந்த காணொளிகள் வெளியான நிலையில், சிலர் கிராண்ட் ஹொட்டல் நிர்வாகத்திற்கு இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட ஹொட்டல் நிர்வாகம், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அந்த கமெராக்களை அப்புறப்படுத்தியுள்ளது.

மட்டுமின்றி பாதுகாப்பு அம்சங்களையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. இதன் விளைவாக அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இருப்பினும் அவர் பதிவேற்றியுள்ள காணொளிகள் தற்போதும் இணையத்தில் பலரால் பார்க்கப்பட்டு வருவதாகவும்,

அந்த காணொளிகளை அப்புறப்படுத்துவது தற்போதைய சூழலில் சாத்தியமற்றது எனவும் கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers