சுவிட்சர்லாந்தில் ஹொட்டலுக்குள் புகுந்து மர்ம நபர் அட்டகாசம்: கத்தியால் தாக்கியதால் பரபரப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ப்ரைபோர்க் மண்டலத்தில் பிரபல ஹொட்டலுக்குள் புகுந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி ஆயிரக்கணக்கான பிராங்கு தொகையை அள்ளிச் சென்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ப்ரைபோர்க் மண்டலத்தில் உள்ள க்ரையர்ஸ் பகுதியிலேயே இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

வெள்ளியன்று பகல் சுமார் 10.45 மணியளவில் ஹொட்டலுக்குள் புகுந்த அந்த நபர் அங்குள்ள ஊழியர் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

ஹொட்டல் உழியர்கள் இச்சம்பவத்தை அடுத்து ஒன்று திரண்டதும், அந்த நபர் அங்கிருந்து ஆயிரக்கணக்கான பிராங்கு தொகையை அள்ளிக் கொண்டு அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் ஹொட்டல் நிர்வாகம் அன்று மாலையே மண்டல பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளது.

உடனடியாக அப்பகுதிக்கு ரோந்து பொலிசாரை அனுப்பி வைத்து தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ஆனால் அந்த நபரை இதுவரை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

தற்போது அந்த விவகாரத்தை நேரில் பார்த்த பொதுமக்களை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

ஹொட்டலுக்குள் புகுந்த அந்த நபர் ஆயிரக்கணக்கான பிராங்குகள் தொகையுடன் மாயமாகி உள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்