சுவிட்சர்லாந்தில் பிறந்தும் சுவிஸ் குடியுரிமையை இழந்த பெண்: நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பிறந்தும் தனது சுவிஸ் குடியுரிமையை இழந்துள்ளார் ஒரு பெண்.

அந்த பெண் 1950களில் பிறந்தவர். அவருக்கு 10 வயது இருக்கும்போது, சுவிஸ் குடிமக்களாகிய அவரது பெற்றோர் விவாகரத்து செய்ய, அவரது தாய் ஒரு பெல்ஜியம் நாட்டவரை மணந்துகொண்டார்.

அதனால் அவரது குடும்பம் பெஜ்ஜியத்துக்கு குடிபெயர்ந்தது.

அந்த காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்த விதிமுறைகளின்படி, அந்த பெண்ணின் தாய், சுவிஸ் அதிகாரிகளிடம் தனது சுவிஸ் குடியுரிமையை தக்கவைத்துக் கொள்ள தான் விரும்புவதாக தெரிவித்திருக்க வேண்டும், ஆனால் அவர் அப்படி செய்யாததால் அவர் தனது சுவிஸ் குடியுரிமையை இழந்தார்.

அதேபோல் ஒரு பெல்ஜியம் நாட்டவரை மணந்துகொண்ட மகளும் (அந்த பெண்ணும்) தனது சுவிஸ் குடியுரிமையை இழந்தார்.

தனக்கு 49 வயதாகும்போது தனது மகளுடன் சுவிட்சர்லாந்துக்கு திரும்பிய அந்த பெண், Vaud மாகாணத்தில் வாழ்ந்துவந்தார்.

ஆனால் தனது கணவனில்லாமல் தனியாக வாழ்ந்த அவரால் வேலை ஒன்றை தேடிக்கொள்ள முடியவில்லை.

அரசு உதவியில் வாழ்ந்துவந்த அவர் 2016 இறுதிவரையில் 265,000 சுவிஸ் ஃப்ராங்குகள் உதவித்தொகை பெற்றிருந்தார்.

அவரது மோசமான நிதி நிலைமையை கருத்தில் கொண்டு அவரது வாழிட உரிமத்தை புதுப்பிப்பதில்லை என உள்ளூர் அதிகாரிகள் முடிவு செய்தனர். அவரது மகளுக்கும் அதே நிலைமைதான்.

ஒரு சிறப்பு உரிமத்தை பெற்றுத்தர மாகாண அதிகாரிகள் முயற்சித்தபோது, மாகாண புலம்பெயர்தல் அமைச்சகம் அதை நிராகரித்துவிட்டது. நீதிமன்ற படியேறினார் அந்த பெண்.

ஆனால், ஃபெடரல் நீதிமன்றமும், அந்த பெண்ணும் அவரது மகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என தீர்ப்பளித்துவிட்டது. தற்போதைக்கு அவருக்கு ஒரே ஆறுதல், அவர் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்பதுதான்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்