சுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப்பூச்சிகளால் பலருக்கு பாதிப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப்பூச்சிகளால் பலர் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

சுவிட்சர்லாந்தில் processionary caterpillar என்னும் ஒருவகை அந்துப்பூச்சியின் கம்பளிப்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது.

அதனால் பலருக்கு நச்சுபாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பூச்சிகளின் நுண் முடி உடலில் பட்டால், பயங்கர எரிச்சல் ஏற்படுவதோடு, ஒவ்வாமையும் சில நேரங்களில் ஆஸ்துமா பிரச்னையும் ஏற்படும்.

மேலும் இந்த பூச்சிகளை நுகர்ந்து பார்க்கும் நாய்களும் கடுமையாக பாதிக்கப்படும்.

இந்த கம்பளிப்பூச்சிகளும், அவற்றின் அந்துப்பூச்சிகளும் (moth) ஐரோப்பா முழுவதும் சுவிட்சர்லாந்திலும் பரவிவருவதையடுத்து பலருக்கு அவற்றால் நச்சு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு 45 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய ஆண்டு 11 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

கம்பளிப்பூச்சிகளைக் கண்டால் அவற்றைத் தொடவேண்டாம் என்றும், விலங்குகளையும் அருகில் விடவேண்டாம் என்றும் உள்ளூர் சுகாதார அலுவலர்களை அணுகுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்