ஒரே வங்கியில் இருமுறை கொள்ளையடித்த நபர்: துப்பு கொடுத்தால் பரிசு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
145Shares

பேசல் வங்கி ஒன்றில் இருமுறை கொள்ளையடித்த நபர் குறித்து துப்புக் கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அந்த வங்கி அறிவித்துள்ளது.

சமீபத்தில் பேசல் வங்கி ஒன்றில் இரண்டு முறை கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஏப்ரல் மாதம் அந்த வங்கியில் நுழைந்த ஒருவர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பல ஆயிரம் சுவிஸ் ஃப்ராங்குகளைக் கொள்ளையடித்துச் சென்றார்.

ஆகத்து மாத துவக்கத்தில் அதே வங்கியில் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து, துப்பாக்கியால் திடீரென சுட்டார்.

அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், அந்த நபர் ஏராளமான பணத்தைக் கொளையடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றார். இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே ஆள்தான் என வங்கி அதிகாரிகள் நம்புகிறார்கள்.

எனவே யாராவது அந்த கொள்ளைச் சம்பவம் குறித்து துப்புக் கொடுத்தால், அவர்களுக்கு 25,000 சுவிஸ் ஃப்ராங்குகள் பரிசளிக்கப்படும் என அந்த வங்கி அறிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்