இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டவர்: சுவிஸில் கைது

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

இரட்டைக் கொலை வழக்கில் சிக்கி, இத்தாலிய பொலிசாரால் தேடப்பட்டு வந்த நபரை சுவிஸ் பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் டிசினோ மண்டலத்தில் லுகானோ பிராந்தியத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் பதுங்கி இருந்த 51 வயதான நபரை மண்டல பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சர்வதேச பிடியாணை அறிவிக்கப்பட்டு, இத்தாலிய பொலிசாரால் குறித்த நபர் தேடப்பட்டு வந்துள்ளார்.

டிசினோ மண்டல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தாலிய பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை மண்டல பொலிசார் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இத்தாலியின் கலாப்ரியா பிராந்தியத்தில் இரு வேறு கொலை வழக்கு தொடர்பில் இவர் தேடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சடலத்தை சேதப்படுத்தி அடையாளங்களை அழித்தல், மறைவு செய்தல் மற்றும் சட்டவிரோதமாக ஆயுதங்கள் கைவசம் வைத்திருத்தல் உள்ளிட்ட வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்துள்ளார்.

கடந்த ஏபரல் 21 ஆம் திகதி நடந்த சம்பவத்தில், இத்தாலிய பொலிசார் துரித நடவடிக்கை மேற்கொண்டதுடன், சர்வதேச பிடியாணையும் வெளியிட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்