சுவிட்சர்லாந்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு காப்பீடு தொடர்பில் ஒரு எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட்டுக்குப்பின், சுவிட்சர்லாந்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களின் ஐரோப்பிய மருத்துவ காப்பீட்டு அட்டை (EHIC) பயன்படாமல் போகலாம் என பிரித்தானியா எச்சரித்துள்ளது.

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, உங்கள் EHIC, பிரெக்சிட்டுக்கு முன் நீங்கள் சுவிட்சர்லாந்துக்கு பயணித்தால் செல்லத்தக்கதாக இருக்கும் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பிரெக்சிட்டுக்குப்பின் சுவிட்சர்லாந்துக்கு பயணித்தால், உங்கள் EHIC செல்லாமல் போகலாம்.

எனவே, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்கும் அனைவரும், அது பிரெக்சிட்டுக்கு முன்னானாலும் சரி, பின்னானாலும் சரி, காப்பீடு எடுத்துக் கொள்ளுமாறு NHS பொதுவான ஆலோசனை ஒன்றை கூறியுள்ளது.

உங்களுக்கு ஏதேனும் உடல் நல பிரச்சினை இருந்தால், உங்கள் மருத்துவர் மற்றும் காப்பீட்டு அலுவலரிடம் ஆலோசனை பெறவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்