இரண்டு ஆண்டுகளில் 61 குற்றங்கள் செய்த நபர் நாடு கடத்தல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
207Shares

சுவிட்சர்லாந்தில் பிறந்த துருக்கியர் ஒருவர், இரண்டு ஆண்டுகளில் 61 குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

25 வயதுடைய அவரது வாழிட உரிமம் ரத்து செய்யப்பட இருப்பதாக பெர்ன் நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.

அவர் துருக்கியர் என்றாலும், சுவிட்சர்லாந்தில் பிறந்த அவர் இதுவரை தனது தாய்நாட்டில் வாழ்ந்ததில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 61 குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார் அவர். அவற்றில் பெரும்பாலானவை பயங்கர குற்றங்கள்.

தாக்குதல், கொள்ளை மற்றும் வீடுகளுக்கு தீவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் அவர்.

சுவிட்சர்லாந்து நாட்டினரோடு ஒத்துழைத்து வாழ அவர் தவறிவிட்டதாக தெரிவித்துள்ள நீதிமன்றம், அவருக்கு துருக்கியில் ஒரு குடும்பம் இருக்கும் நிலையில் அவரை துருக்கிக்கு நாடு கடத்துவது நியாயம்தான் என்று தெரிவித்துள்ளது.

40 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தபிறகு, அவர் துருக்கிக்கு நாடு கடத்தப்படுகிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்