சைவநெறிக்கூடம் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டார்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

ஈழத்தில் யாழ். நாச்சிமார் கோவில் எனும் ஊரைச்சேர்ந்த இசைவாணர் திருநிறை. கண்ணன் "ஈழத்தின் மெல்லிசை மன்னர் " தனது பாடசாலைக் கல்வியினை நிறைவுசெய்துகொண்டு, முறைப்படி தனது இசையப்பயிற்சியினை ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் பெற்று தன்னை முழுமையாக இசைவாழ்வில் ஈடுபடுத்திக்கொண்டவர் ஆவார்.

பொதுவாக ஈழத்தில் கலையை மட்டும் தொழிலாக்கிக்கொள்வது கடினமானதாகும். இக்கடினத்தை வெற்றிக்கொண்ட சிலரில் ஒருவராக இவர் விளங்குகின்றார்.

1960 ஆண்டுகள் தொடக்கம் ஈழத்தில் இசைக்குழுவை அமைத்து, தென்னிந்தியக் கலைஞர்களை மட்டுமே அழைத்து விழா நடத்திக்கொண்டிருந்த காலத்தை மாற்றி தன் குழுவோழு இலங்கை முழுவதும் இசைப்பயணம் மேற்கொண்ட ஒருவராக கண்ணன் மாஸ்ரர் உள்ளார்.

அன்றைய காலம் முதல் போர்க்காலம் வரை இவரது இசைப்பயணம் பல வடிவங்களில் தொடர்ந்தது. இசையின்பால் விருப்பும் நாட்டமும் கொண்டு கட்டற்ற கலைஞனாக வடிவெடுத்து, காலத்திற்கேற்ப தன்னை பெருகேற்றிக்கொண்டு பல் சவால்களை வென்று ஈழத்தமிழர்கள் நெஞ்சில் தமிழிசைக் கலைஞனாக இவர் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

1983ம் ஆண்டுவரை தெற்கிலும் வடக்கிலும், மேடைநாடகங்களிலும் இலங்கைத் தமிழ்ப்படங்களிலும், வானொலியிலும் இசையமைத்து வந்தரவ் இவராவார்.

இனக்கலவரத்திற்குப்பின் யாழ்ப்பாணத்தில் சிலகாலம் ஓய்வுகொண்டாலும் மீண்டும் இசைப்பயணத்தை தொடங்கியவர் 90களில் ஈழவிடுதலை இசையிலும் தன் பங்களிப்பினை நிறைவாக ஆற்றினார். மாவீரர் துயிலுமில்லப்பாடலில் உயிரை வருடும் இசையினை வார்த்த பேறுபெற்றவராவர் கண்ணன் மாஸ்ரர்.

தனது கலைச்செல்வத்தை பல மாணவர்களுக்கு அள்ளிப்பருகக்கொடுத்து பன்முகக் கலைஞர்கள் பலரும் துளிர்விட கண்ணன்மாஸ்ரர் ஒரு காரணியாக அமைந்துள்ளார்.

இப்பெரும் கலைஞர் பிரான்ஸ்நாட்டில் நடைபெற்ற இசைநிகழ்விற்கு அழைக்கப்பட்டு, சுவிற்சர்லாந்திற்கும் வருகையளித்திருந்தார்.

இதன்போது 30. 10. 2019 அன்று சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் அமைந்துள்ள தமிழ்வழிபாட்டுத் திருக்கோவில் ஞானலிங்கேச்சுரத்தில் செந்தமிழ் அருட்சுனையர்களால் திருநிறை.

கண்ணன் மாஸ்ரர் மற்றும் இவரது மகன் சாய் தர்சன் பூவாரம் பொன்னாடை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டார்கள். பலநூதமிழர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ந்தனர்.

புலம்பெயர்நாட்டில் வாழும் இளந்தமிழ்த் தலைமுறையினர்களுக்கும் இவரது பணி அறியப்பட்டதாக என்றும் இருக்க வேண்டும் எனும் கருத்தினை மதிப்பளிப்பின்போது சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் வலியுறுத்தினார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்