அமெரிக்கா-ஈரான் இடையே சிக்கிக்கொண்டு சுவிஸ் படும் பாடு! நாட்டை விட்டு ஓடி விடுங்கள் என எச்சரிக்கை

Report Print Basu in சுவிற்சர்லாந்து

ஈரானில் அமெரிக்காவை பிரநிதித்துவப்படுத்தும் சுவிஸ் தூதருக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அப்பாஸ் மௌசவி, அமெரிக்காவின் செய்திக்கு ஈரான் தனது பதிலை சுவிஸ் தூதரிடம் தெரிவித்தது என்று கூறினார்.

ஈராக்கில் தளபதி கொல்லப்பட்டதை அடுத்து, ஈரானில் உள்ள சுவிஸ் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டு வரவழைக்கப்பட்டார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான நிகழ்வு என்றும், அதன் அனைத்து விளைவுகளுக்கும் அமெரிக்க ஆட்சியே பொறுப்பு என்றும் சுவிஸ் தூதரிடம் கூறப்பட்டது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் மௌசவி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பின்னர், அமெரிக்கா அனுப்பிய செய்தியை ஈரானிடம் சுவிஸ் தூதர் தெரிவித்துள்ளார். எனினும், பரிமாற்றம் செய்யப்பட்ட செய்தி குறித்த கூடுதல் விவரங்களை வழங்க சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நள்ளிரவில் தலைநகரில் உள்ள சுவிஸ் தூதரகத்திற்கு முன் கூடிய தெஹ்ரான் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘இப்பகுதி உங்கள் பெரிய கல்லறையாக மாறும், எங்கள் கடுமையான பழிவாங்கலுக்காக காத்திருங்கள்’.

‘அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை என்பது தளபதி குவாசிம் இரத்ததை மிதப்பதாகும்’ .

இஸ்ரேல் ஒழிக, அமெரிக்கா ஒழிக மற்றும் ‘நாங்கள் உங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு முன்பு பிராந்தியத்தை விட்டு ஒடிவிடுங்கள்’ என்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாகைகளை எழுந்திய படி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்