சுவிஸ் தெருவில் கண்டெடுக்கப்பட்ட மர்ம சடலம்: உடற்கூராய்வில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் Kirchberg பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலத்தில் இருந்து பல ஆயிரம் பிராங்குகள் மதிப்பிலான போதை மருந்து பொட்டலங்களை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் Kirchberg பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி ஆணின் சடலம் ஒன்றை வழிபோக்கர் ஒருவர் கண்டறிந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த சடலத்தை உடற்கூராய்வுக்கு உட்படுத்திய மருத்துவர்கள், அவரது உடம்பில் இருந்து போதை மருந்து பொட்டலங்களை வெளியே எடுத்துள்ளது பொலிசாருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

அந்த நபர் தொடர்பில் அடையாளம் காணப்படுவது என்பது கடினமான ஒன்று என தெரிவித்துள்ள St. Gallen மண்டல பொலிசார்,

சடலம் கண்டெடுக்கப்படும்போது முழு நிர்வாணமாக இருந்ததாகவும், அடையாள அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் அதில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையும் உரிய பலனை அளிக்கவில்லை என தெரிவித்துள்ள பொலிசார்,

தேசிய மற்றும் சர்வதேச தரவுத்தளங்களில் அவரது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படம் உள்ளிடப்பட்டுள்ளன எனவும்,

குறைந்த பட்சம் தேசிய மட்டத்திலும், ஐரோப்பாவில் உள்ள நாடுகளிலும் இந்த விவகாரம் தொடர்பில் தகவல் திரட்டப்படும் என தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்த நபரின் குடலில் ஏராளமான போதைப்பொருள் பொட்டலங்களைக் கொண்டிருந்தார் என்றும், அநேகமாக போதை மருந்து பொட்டலம் வெடித்ததால் அவர் இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்