வீட்டுக்குள் நுழைந்த திருடனை பிடித்த வயதான தம்பதி: தப்பியோடாமல் இருக்க செய்த செயல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வீட்டுக்குள் நுழைந்த திருடனை துணிந்து பிடித்த வயதான தம்பதியினர், அவன் தப்பி ஓடாமல் இருப்பதற்காக, அவன் மீது ஏறி உட்கார்ந்துகொண்டனர்.

Trimbachஇல் வசிக்கும் Romy (60) மற்றும் Benjamin தம்பதி தூங்கிக்கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் ஏதோ சத்தம் கேட்டு விழித்துள்ளனர்.

வீட்டுக்குள் திருடன் நுழைந்துள்ளதை அறிந்த அவர்கள் இருவரும், துணிச்சலுடன் அவனைப் பிடித்து தரையில் தள்ளி அவன் மீது ஏறி உட்கார்ந்துகொண்டுள்ளனர். உடனடியாக பொலிசாரை அழைத்ததுடன், பொலிசார் வரும் வரை, அந்த 32 வயதுள்ள திருடன் முதுகிலேயே உட்கார்ந்துகொண்டுள்ளனர் அந்த தம்பதியர்.

பொலிசார் வந்து அவனைக் கைது செய்ததுடன், அவன் திருடியிருந்த லாப் டாப் மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தங்கள் முதிர் வயதிலும் துணிச்சலுடன் திருடனைப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்ததற்காக பொலிசார் அந்த தம்பதியரை பாராட்டியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்