அமெரிக்கா-ஈரான் பதற்றத்தை குறைக்க உதவிய சுவிட்சர்லாந்து: இதுவரை வெளிவராத தகவல்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

அமெரிக்க வான்வெளித் தாக்குதலில் ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்ட சில மணி நேரங்களுக்குள் அமெரிக்கா ஈரானுக்கு ஒரு அவசர செய்தியை அனுப்பியுள்ளது, அது: பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம்! என்பதுதான்.

ஆனால், அந்த செய்தி நேரடியாக அமெரிக்காவிடமிருந்து ஈரானுக்கு செல்லவில்லை. அது சுவிட்சர்லாந்து வழியாக ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மறைமுக குறியீடுகள் மூலம் அனுப்பப்பட்ட அந்த செய்தி, ஈரானிலுள்ள சுவிஸ் தூதரகத்துக்கு அனுப்பப்பட்டு, அதன் பின் சுவிஸ் தூதரகத்திலிருந்து ஈரானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியே அமெரிக்க மற்றும் ஈரான் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் உசுப்பேத்தும் வகையில் சூடான வார்த்தைகளைக்கொண்டு பரஸ்பரம் தாக்கிக்கொண்டிருக்க, மறுபுறம் அமைதியாக இரு நாட்டு தலைவர்களும் அடக்கி வாசித்துள்ளார்கள்.

ஒப்பீட்டளவில் அமைதியான இந்த பேச்சுவார்த்தைகள், சுவிஸ் தூதரகம் வாயிலாகத்தான் நடந்துள்ளன.

ஒரு வாரத்திற்குப்பின், அதாவது அமெரிக்காவை பழிவாங்குவதற்காக ஈரான் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்திய பின், வெளிப்படையாக வெறுப்பை உமிழ்வதிலிருந்து இரு நாடுகளும் சற்று பின்வாங்கியுள்ளன.

குறைந்தபட்சம் தற்போதைக்கு! பொதுவாக நாங்கள் ஈரானுடன் அதிகம் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை, அப்படி பேசும்போது, இரு நாடுகளுக்கும் இடையில் செய்திகளைப் பறிமாறிக்கொள்வதிலும், தவறான புரிந்துகொள்ளுதல்களை தவிர்ப்பதிலும் சுவிட்சர்லாந்து மிக முக்கிய பங்காற்றியுள்ளது என்கிறார் மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர்.

இது குறித்து கேட்டபோது, ஈரான் செய்தி தொடர்பாளர் ஒருவர் கருத்துக்கூற மறுத்தாலும், தேவையானபோது தகவல்களை பறிமாறிக்கொள்ள சுவிட்சர்லாந்து எடுக்கும் முயற்சிகளை பாராட்டுகிறோம் என்றார்.

மற்றொரு ஈரான் அதிகாரி, மற்ற எல்லா வழிகளும் பாதகமாக இருந்தபோது, சுவிஸ் மட்டும் வழி ஏற்படுத்திக்கொடுத்தது, பாலைவனத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட விலையேறப்பெற்றதுதானே என்கிறார்.

உண்மையில், சுவிஸ் தூதரகம் கிட்டத்தட்ட பிரச்சினைக்குரிய நாற்பது ஆண்டுகள், ஏழு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலத்தில் முக்கிய பங்காற்றியுள்ளதாம், ஜிம்மி கார்ட்டரின் பிணைக்கைதிகள் பிரச்சினை முதல் பராக் ஒபாமாவின் அணு ஆயுத ஒப்பந்தம் வரை.

சுவிட்சர்லாந்தின் இந்த உதவி மிகவும் முக்கியம் என்று கூறும் முன்னாள் நியூ மெக்சிகோ கவர்னரான Bill Richardson, குறைந்த நேரத்தில் பதற்றத்தைக் குறைக்க அவர்கள் உதவியுள்ளார்கள் என்கிறார்.

Bill Richardson, கைதிகள் பரிமாற்றத்தின்போது சுவிட்சர்லாந்துடன் பணியாற்றியவர் ஆவார்.

இப்போதைக்கு, சுவிட்சர்லாந்து மட்டுமே உதவும் ஒரே வழி என்கிறார் அவர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்