சுவிஸ் கேபிள் கார் பணியாளருக்கு கிடைத்த 20,000 டொலர்கள் அடங்கிய பை: அவர் என்ன செய்தார் தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
367Shares

சாதாரண சுவிஸ் கார் பணியாளர் ஒருவர் கையில் 20,000 டொலர்கள் அடங்கிய பை ஒன்று கிடைத்த நிலையில், நேர்மையாக அந்த பையை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார் அவர்.

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்த ஒரு 40 வயதுடைய சீன நாட்டு சுற்றுலாப்பயணி தனது முதுகுப்பையை தவற விட்டிருக்கிறார்.

கலங்கிப்போன நிலையில், அவரைக் கண்டுபிடித்த பொலிசார், அவரது பையை அவரிடம் ஒப்படைக்க, அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டதை பொலிசார் கண்ணால் கண்டுள்ளார்கள்.

அந்த பையைக் கண்டுபிடித்து ஒப்படைத்த, 32 வயதுடைய பணியாளரின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு சிறு தொகை ஒன்று வழங்கப்பட்டது.

ஆனால் அவர் யார், அவருக்கு எவ்வளவு சன்மானம் வழங்கப்பட்டது என்பது போன்ற விடயங்களை பொலிசார் வெளியிடவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்