சுவிஸ் எல்லையில் பிடிபட்ட தம்பதி: காரில் என்ன கிடைத்தது தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் பிரெஞ்சு எல்லையில், ஒரு பிரெஞ்சு தம்பதியர் சுங்க அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.

சுவிஸ் எல்லை பாதுகாப்பு படையினர் வாகன சோதனையின்போது கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது அந்த காருக்குள் ஜெனீவாவில் வாழும் ஒரு பிரெஞ்சு தம்பதியர் இருந்துள்ளனர்.

மேலும், அந்த காரை சோதனையிட்டபோது, காருக்குள் மொத்தம் ஒன்பது துப்பாக்கிகள் இருந்துள்ளன.

அத்துடன் 145 துப்பாக்கி குண்டுகளும் இருந்ததையடுத்து அந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த 50 வயது கணவர், மற்றும் 37 வயது மனைவி இருவரிடமுமே ஆயுதங்களை கொண்டு செல்ல உரிமம் இல்லை.

ஆயுதங்களுடன், தம்பதியும் பேசல் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சுவிஸ் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் சட்ட விரோத ஆயுதங்களின் எண்ணிக்கை 2018-லிருந்து இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்