குளிக்கும் 100 பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த நபர் கைது: மக்கள் கோபம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ரகசியமாக பெண்களை வீடியோ எடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை இவ்வளவு காலம் கைது செய்யாமல் விட்டது ஏன் என மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சூரிச்சைச் சேர்ந்த 43 வயது நபர் ஒருவர், பெண்கள் குளிக்கும்போதும், தூங்கும் போதும் ஏன் கழிவறையைப் பயன்படுத்தும் போதும் கூட அவர்களை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

ரகசியமாக வீடுகளுக்குள் எட்டிப்பார்க்கும் அந்த நபர் ஜன்னல் வழியாக சிலரை வீடியோ எடுத்துள்ளார்.

அவர் இப்படி தொடர்ந்து ஒரு வீட்டையே சுற்றி சுற்றி வந்ததால், பயந்துபோய் ஒரு குடும்பம் வீட்டையே காலி செய்துவிட்டு ஓடியிருக்கிறது.

ஒரு இளம்பெண், ஒவ்வொரு முறை குளிக்கும்போதும் பயத்துடனேயே குளிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த நபரிடமிருந்து பொலிசார் நூற்றுக்கணக்கான பெண்கள் இருக்கும் வீடியோக்களை கைப்பற்றியுள்ளனர்.

அவர்களில் 21 பெண்கள் சார்பில் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியமளிக்கப்பட்டது. மேலும் 90 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இப்படி ஒருவரை இதுவரை கைது செய்யாதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அந்த நபர், இளம்பெண்களுக்கு தெரியாமல் அவர்களது உடைகளுக்கு கீழ் கமெராவை வைத்து படம் எடுத்ததற்காக ஏற்கனவே பல முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மன நல சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட உள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்