ஒரே நாளில் 800 பேர் கொரோனாவால் பாதிப்பு: சுவிஸ் மருத்துவமனைகள் முற்றாக முடங்கும் அபாயம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் சுவிஸ் மருத்துவ சேவை முற்றாக ஸ்தம்பிக்கும் அபாயமிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகள் பல புதிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நாளுக்கு நாள் கடுமையாக இலக்காகி வருகின்றன.

சுவிட்சர்லாந்தில் மட்டும் ஒரே நாளில் 842 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 14 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 2,217 என அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை கையாள முடியாமல் மருத்துவ சேவைகள் மொத்தமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளை நாடும் நோயாளிகள் பெரும்பாலானவர்களுக்கு ஒரே நோய் அறிகுறி எனவும், சுயமாக மூசுசுவிட முடியாமல் அவதிப்படுவதாகவும், இதனால் செயற்கை சுவாச அளிக்கும் இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் தற்போது 1,000 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளன, அவற்றில் 850 வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதத்தினர் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழல் உருவானால், அடுத்த சில மாதங்களில் சுமார் 80,000 மக்களுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படலாம் என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய சூழலில் Covid 19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால், உண்மையில் ஒரு பேரளையாக இது உருமாறி நம்மை மூழ்கடித்துவிடும் எனவும் எச்சரிக்கின்றனர்.

இந்த நிலையில், மருத்துவர் ஒருவர் தமது பேஸ்புக் பக்கத்தில், இது ஒரு போர் எனவும் இரவு பகல் பாராமல் போர்க்களத்தில் போராடுகிறோம் என குறிப்பிட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்