சுவிட்சர்லாந்தை மொத்தமாக முடக்க வலியுறுத்திய விஞ்ஞானி: மிக மோசமாக திட்டித் தீர்த்த மக்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்து முழுவதும் குறிப்பிட்ட காலத்திற்கு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த விஞ்ஞானி ஒருவர் பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் மிகவும் வெறுக்கப்படும் விஞ்ஞானியாக தாம் தற்போது மாறியுள்ளதாக சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த அட்ரியானோ அகுஸி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த இக்கட்டான சூழலில் பொதுமக்கள் அனைவரும் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பது தெரியும் என குறிப்பிட்ட அகுஸி,

மக்கள் தங்கள் பொருளாதார எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார்கள், அதானாலையே நிபுணர்களின் கருத்துகள் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது என்றார்.

மொத்தமாக முடக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த பின்னர் பலர் தம்மை இழிவாக விமர்சித்ததாகவும்,

நள்ளிரவிலும் தொலைபேசியில் தொடர்புகொண்டு திட்டியதாகவும், ஏன் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ளும் நிலைக்கு தாம் தள்ளப்பட்டதாகவும் அகுஸி தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து மொத்தமாக முடக்கப்பட்டால் மட்டுமே, நாம் சில எண்ணிக்கையிலான இறப்புகளுடன் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தப்ப முடியும் என்கிறார் அகுஸி.

இத்தாலியின் நிலைமை தம்மை தூங்க விடாமல் செய்துள்ளது என கூறும் அகுஸி, அதுபோன்ற நிலை சுவிட்சர்லாந்தில் வெகுதொலைவில் இல்லை என்கிறார்.

மேலும், கடுமையான நடவடிக்கைகள் கூடுதல் உயிர்களை காப்பாற்றுவது மட்டுமல்லாமல், ஓரளவிற்கு பொருளாதாரத்தை சிறப்பாக பாதுகாக்கும்.

பின்னர் நோயை மிக விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். ஹொட்டல்கள் அனைத்தும் தற்போது வாடிக்கையாளர்கள் இன்றி உள்ளது, இஸ்ரேலிய நிரவாகத்தை போன்று, ஹொட்டல் அறைகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கலாம் என்கிறார் அகுஸி.

மேலும், தற்போதைய நிலையை வெளிப்படையாகவும் ஒளிவு மறைவின்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டும் அதுவே அரசு இனி செய்ய வேண்டியது என்கிறார் அகுஸி.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்