கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து நடக்கும் சுவிஸ் குடிமக்கள்: மொபைல் டேட்டாவை கண்காணித்ததன் மூலம் உறுதியானது!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
765Shares

சுவிஸ் அரசு அறிவித்திருந்தபடி, மொபைல் டேட்டாவை கண்காணித்ததன் மூலம், மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, சுவிட்சர்லாந்தில் மேலதிக கட்டுப்பாடுகள் விதிப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 20ஆம் திகதி, கொரோனா பரவுவதையும், அது பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதையும் தடுப்பதற்காக, பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது சுவிஸ் அரசு.

அவற்றில் முக்கியமானது மக்கள் ஓரிடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதை தவிர்ப்பது.

மக்கள் விதிகளுக்கு கட்டுப்பட்டு, நடமாட்டத்தைக் குறைக்கிறார்களா என்பதை மொபைல் டேட்டா மூலம் கண்காணித்து, கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முடிவு செய்ய அரசு முடிவு செய்திருந்தது.

thelocal

அதை வைத்துத்தான் தற்போது மாலை 6 மணிக்கு மேல் அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை 24 மணி நேர ஊரடங்கு உத்தரவாக்குவதா இல்லையா என்பதையும் முடிவு செய்ய இருந்தது அரசு.

இந்நிலையில், ஏற்கனவே அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகள் மட்டுமே தொடரும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த மொபைல் டேட்டா கண்காணிப்பு, மக்கள் பொது இடங்களில் அதிக அளவில் நடமாடுகிறார்களா என்பதை கண்காணிக்க மட்டுமே எனவும், அதைக் குறித்து பயப்படவேண்டாம் என்றும் சுவிஸ் உள்துறை அமைச்சர் Alain Berset தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்