கொரோனாவால் சுவிட்சர்லாந்துக்கு பெரும் வருவாய் இழப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கொரோனா தொற்று, சுவிட்சர்லாந்தில் பெரும் வருவாய் இழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

கொரோனா அச்சத்தால் சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள், ஹொட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டு சுற்றுலாத்தொழில் நிலைகுலைந்துபோய் நிற்கிறது.

இதனால் சுவிஸ் சுற்றுலாத்துறைக்கு 6 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை இழப்பு ஏற்படலாம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

வலாயிஸ் பல்கலைக்கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், 2020இல் சுற்றுலாத்துறை வருவாய் 18% அளவுக்கு குறையும் என கண்டறியப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடையில் ஹொட்டல் துறையில் மட்டும் 2 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை இழப்பு ஏற்படலாம் என அந்த ஆய்வு கூறுகிறது.

சாதாரண சூழலில், ஹொட்டல் துறையில் 10.2 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் 17ஆம் திகதி, அத்தியாவசிய நடவடிக்கைகள், தொழில்கள் தவிர மற்றவை நிறுத்தப்படவேண்டும் என சுவிஸ் அரசு அறிவித்தது.

என்றாலும் ஹொட்டல்கள், மளிகைக் கடைகள், பேக்கரிகள், மருந்தகங்கள், வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், உலகம் முழுவதும் கொரோனா பரவுவதால் சர்வதேச பயணம் என்பதே இயலாத ஒன்றாகிவிட்ட நிலையில் சுற்றுலாத்துறை ஸ்தம்பித்துப்போனது.

இந்த ஆய்வு, சுவிஸ் தொழில் துறை, ஹொட்டல்களில் பணியாற்றுவோர், லிப்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஹொட்டல் சார்ந்த துறைகளில் பணியாற்றும் 2,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்