இந்த வடுக்கள் ஆறாது... 500 பில்லியன் பிராங்குகள் இழப்பீடு வேண்டும்: நீதிமன்றம் நாடிய சுவிஸ் முதியவர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் முதியவர் ஒருவர் அண்டை வீட்டுக்காரர் பழி வாங்கும் நோக்கில் சூடான நீரை தம்மீது ஊற்றியதாக கூறி 500 பில்லியன் பிராங்குகள் இழப்பீடு கோரியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் கடந்த 2019 ஜூன் மாதம் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

51 வயதான அந்த நபரின் அண்டை வீட்டுக்காரர் ஜன்னல் வழியாக இரண்டு மூன்று லிற்றர் சூடான நீரை அவர் மீது ஊற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 51 வயது நபரின் குடியிருப்புடன் சேர்ந்த முற்றத்தில் இருந்து அளவுக்கு மீறிய சத்தம் எழுப்பப்படுவதாகவும்,

பொலிசாரிடம் இந்த விவகாரம் தொடர்பில் பல முறை புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்ட 37 வயது பெண்மணி தெரிவித்துள்ளார்.

மேலும், பிறருக்கு வலியை ஏற்படுத்தும் உலகின் கடைசி நபர் தாமாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, அன்று என்ன நடந்தது என்று கூட தமக்குத் தெரியாது எனவும், தாம் சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரம் அங்கே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், குறித்த பெண்ணின் குரலை தாம் கேட்டதாக பாதிக்கப்பட்ட அந்த நபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலில் ஏதோ பேசிய அவர், பின்னால் ஜன்னலை திறந்து லிற்றர் கணக்கில் தம்மீது சூடான நீரை ஊறியதாக தெரிவித்துள்ளார்.

இந்த வடுக்கள் ஆயுள் முழுவதும் தமது உடம்பில் இருக்கும் எனவும், அதனால் தமக்கு 500 பில்லியன் பிராங்குகள் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என கூறிய மாவட்ட நீதிமன்றம், குறித்த 37 வயது பெண்மணியை விடுவித்துள்ளது.

மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட நபர் ஒவ்வொரு முறையும் தமது நிலைப்பாட்டை தொடர்ந்து மாற்றி வருவதாகவும்,

அவர் முன்வைத்துள்ள இழபீடு தொகை கூட கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்