சூரிச் உயிரியல் பூங்காவில் பெண் காப்பாளருக்கு இறுதி சடங்கு: திரண்ட பொதுமக்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சூரிச் உயிரியல் பூங்காவில் புலி தாக்கியதால் மரணமடைந்த பெண் காப்பாளருக்கு நிர்வாகம் சார்பில் பூங்கா வளாகத்தில் இறுதி சடங்கு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் உறவினர்கள் மற்றும் பூங்கா ஊழியர்கள் உள்ளிட்ட மொத்தம் 200 பேர் பங்கேற்றுள்ளனர்.

மட்டுமின்றி சூரிச் உயிரியல் பூங்காவின் முன்னாள் இயக்குனர் அலெக்ஸ் ரோபல் மற்றும் புதிய இயக்குனர் செவெரின் டிரெசன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

விருந்தினர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு சூரியகாந்தி வழங்கப்பட்டது, அவர்கள் மரத்தாலான ஒரு சிறிய தொட்டிக்குள் அதை வைக்க பணிக்கப்பட்டனர்.

அந்த பூந்தொட்டியானது தற்போது குறித்த புலியை அடைக்கப்பட்டுள்ள கூண்டுக்கு முன்னால் மறு அறிவிப்பு வரும் வரை வைக்கப்பட்டுள்ளது.

ஜூலை 4 ஆம் திகதி சூரிச் உயிரியல் பூங்காவில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இரினா என்ற அந்த புலி தனது செவிலியரைத் தாக்கி, படுகாயமடையச் செய்துள்ளது.

அதேவேளை பெண் புலியும் செவிலியரும் ஒரே நேரத்தில் எவ்வாறு கூண்டுக்குள் சிக்கினார்கள் என்ற விவகாரம் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சூரிச் உயிரியல் பூங்காவை பொறுத்தமட்டில் மனித தொடர்புகள் ஏதுமின்றி புலிகளை பாதுகாத்து வருகின்றனர்.

அதாவது புலியும் அதன் இணையும் ஒன்றாக ஒரே நேரத்தில் ஒரே கூண்டுக்குள் நடமாடுவது சாத்தியமல்ல.

ஆனால் சம்பவத்தன்று தமது பிராந்தியத்தில் மனிதர் ஒருவரை காண நேர்ந்த பெண் புலி, அதன் உள்ளுணர்வின் அடிப்படையில் தாக்குதலில் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்