மிக மோசமான கொரோனா தொற்றிலிருந்து மிக பாதுகாப்பானதாக மாறிய சுவிஸ் மாகாணம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் மாகாணம் ஒன்று மிக மோசமான அளவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த நிலைமையிலிருந்து மிக பாதுகாப்பானது என்ற நிலைக்கு மாறியுள்ளது. Schwyz மாகாணம்தான் அந்த பாராட்டைப் பெற்றுள்ளது.

மிக மோசமான அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த Schwyz மாகாணம், மிக பாதுகாப்பான மாகாணங்களில் ஒன்றாக மாறியுள்ள நிலையில், தொற்று நோயியல் நிபுணர்கள் அதை ஆராய்ந்து வருகிறார்கள்.

செப்டம்பரில் கலை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, Schwyz மாகாணத்தில் கொரோனா பயங்கரமாக பரவிய விடயம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியானது.

கொரோனா நோயாளிகளை சமாளிக்க முடியாமல் கடந்த மாதத்தின் நடுவில் மருத்துவமனைகள் திணறின.

ஆனால், ஆச்சரியப்படத்தக்க விதமாக, அதே Schwyz மாகாணம் இன்று நாட்டிலேயே பாதுகாப்பான பகுதிகளில் ஒன்றாகியுள்ளது.

இது track and trace நடைடைமுறையினால்தான் சாத்தியமானது என்கிறார், தொற்று நோயியல் நிபுணரான Marcel Tanner.

மாகாணத்தில் நிகழ்ந்த அந்த கலை நிகழ்ச்சிதான் பிரச்சினைக்கு காரணம் என்பதை புரிந்துகொண்ட அதிகாரிகள், விரைவாக எடுத்த நடவடிக்கையால், பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் கொண்ட மக்கள், தங்களைத்தாங்களே சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்திக்கொண்டதினிமித்தம் நோய் பரவல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார் Tanner.

மக்களின் ஒத்துழைப்பும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறுகிறார் Tanner. காரணம், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், தங்களுடன் தொடர்பிலிருந்தவர்களிடம் விவரத்தைக் கூறி, அவர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதை உறுதி செய்துள்ளார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்