சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் 5 மற்றும் 6 ஆம் வகுப்பு சிறார்களுக்கு மாஸ்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தந்தை ஒருவர் அதற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளார்.
ஆர்காவ் மண்டலத்தில் 5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில்,
கொரோனா பரவலை தடுக்கவும், அதனால் பாடசாலை மீண்டும் மூடப்படுவதை தவிர்க்கவும் முடியும் என மண்டல நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டுமின்றி, எதிர்வரும் 22ம் திகதி முதல் மாஸ்க் கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் Würenlos பகுதியை சேர்ந்த Steven Schraner என்பவர், சிறார்களுக்கு மாஸ்க் அணிவிப்பதால் எவ்வித பயனும் இல்லை என தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சிறார்கள் மாஸ்க் அணிவதால், அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவும், அதனால் பலன் கிடைத்ததாக சிறிய ஆதாரங்கள் கூட இல்லை என்பதையும் 2 பிள்ளைகளின் தந்தையான Steven Schraner சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற இருப்பதாகவும், ஆர்காவ் மண்டல நிர்வாகம் இந்த முடிவை மாற்றும் வகையில் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய இருப்பதாகவும் Steven Schraner தெரிவித்துள்ளார்.