மத்திய குழுவை மதிக்காமல் அவசரப்படும் சுவிஸ் மாகாணங்கள்: அரசாங்கம் கடும் எச்சரிக்கை

Report Print Basu in சுவிற்சர்லாந்து
0Shares

சுவிஸில் இரண்டாவது கட்டமாக உணவகங்களை ஏப்ரல் 1ம் திகதி முதல் திறக்க மத்திய குழு திட்டமிட்டுள்ள நிலையில் முன்னதாகவே உணவகங்களை திறக்க மாகாணங்களிடையே போட்டி நிலவுகிறது.

சுவிஸில் மார்ச் 1ம் திகதி முதல் முதற்கட்டமாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தனது திட்டத்தை சுவிஸ் மத்திய குழு சமீபத்தில் வெளியிட்டது.

அதன் படி, மார்ச் 1ம் திகதி முதல் வெளிப்புற நிகழ்வுகளில் 15 பேர் வரை பங்கேற்க அனுமதியளிக்கலாம். கடைகள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், வெளிப்புற பகுதிகளான உயிரியல் மற்றும் தாவரவியல் பூங்காக்களை திறக்கலாம் என மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.

இருப்பினும், உணவகங்கள் மூடப்பட்டிருக்கும், மேலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் தொடரும் என குறிப்பிட்டிருந்தது.

இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 1ம் திகதி முதல் உணவகங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக சுவிஸ் மத்திய குழு தெரிவித்துள்ளது.

சுவிஸ் மத்திய குழு சமர்ப்பித்துள்ள திட்டம் தொடர்பில் அடுத்த வாரம் அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய குழு திட்டமிட்டதை விட ஒரு மாதம் முன்னதாக மார்ச் 1 ஆம் திகதி முதல் Graubünden மாகாணம் அதன் உணவகங்களை மீண்டும் திறக்க விரும்புவதாக கோரியுள்ளது.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட பெரிய அளவிலான சோதனைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைளை Graubünden எடுத்துள்ளது என்று மாவட்டத் தலைவர் Mario Cavigelli கூறியுள்ளார்.

Vaud உள்ளூர் அரசாங்கமும், மத்திய குழு திட்டமிட்டதை விட முன்னதாக மார்ச் நடுப்பகுதியில் உணவகங்களை திறக்க கோரிக்கை விடுத்துள்ளது.

மாகாணங்கள் முன்னதாகவே கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மத்திய கவுன்சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இலையுதிர்காலத்தில், மாகாணங்களுக்கு இடையேயான வெவ்வேறு விதிகளால் போட்டியின் சிதைவிற்கும் கொரோனா சுற்றுலாவிற்கும் வழிவகுத்தன என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்