சிறிய சாதனத்தை பயன்படுத்தி நாசாவின் தகவல்கள் திருட்டு: 1 வருடம் கழித்து கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

அமெரிக்காவினை தளமாகக் கொண்டு செயற்படும் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பல தகவல்கள் இரகசியமாக பேணி வருகின்றது.

இவ்வாறு பேணப்பட்ட சில தகவல்கள் கடந்த வருடம் தனி நபர் ஒருவரால் திருடப்பட்டுள்ளமை தொடர்பாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சிறிய Raspberry Pi கணினியை பயன்படுத்தியே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாசாவின் Jet Propulsion Laboratory வலையமைப்பில் புகுந்தே தகவல்கள் திருடப்பட்டுள்ளது.

இந்த திருட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்றுள்ளது.

Raspberry Pi என்பது 35 டொலர்களே உடைய கிரடிட் கார்ட் அளவுடைய சிறிய கணினி ஆகும்.

இதனை பொதுவாக ரோபோ தொழில்நுட்பம் மற்றும் சிறுவர்களுக்கு புரோகிராம்களை சொல்லிக்கொடுப்பதற்கு பயன்படுத்துவார்கள்.

இச் சிறிய சாதனைத்தை பயன்படுத்தியே 500MB கோப்பு அளவுடைய 23 கோப்புக்கள் திருடப்பட்டுள்ளன.

தற்போது குறித்த ஹேக்கரை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் நாசா நிறுவனம் இறங்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...