ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல்! இணையத்தில் வெளியான புது தகவல்

Report Print Kavitha in தொழில்நுட்பம்
0Shares

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் வீடியோ வடிவில் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இது “ஐபோன் ப்ளிப்” எனும் பெயரில் அழைக்கப்படவுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இரண்டு விதமான ப்ரோடோடைப்களை மடிக்கக்கூடிய ஐபோனிற்காக உருவாக்கி வருகின்றது.

அதில் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் போன்றே செங்குத்தாக திறந்து மூடும் வகையிலான வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.

சாம்சங் வழியில் ஆப்பிள் கிளாம்ஷெல் டிசைன் கொண்ட மடிக்கக்கூடிய ஐபோனினை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இது ஏராளமான நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் 2022 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் புதிய மடிக்கக்கூடிய ஐபோனின் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்