நடுவரை கடுமையாக வசைபாடிய செர்பியன் வீரர்: வைரல் வீடியோ

Report Print Basu in ரெனிஸ்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் ரெனிஸ் போட்டி லண்டன் நகரில் கடந்த ஜூன் 27ம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரவின் இரண்டாவது சுற்றில் நடந்த ஒரு போட்டியில், ஸ்பெயின் வீரர் ரமோஸ்(Ramos-Viñolas) வினோலஸ் – செர்பியன் வீரர் விக்டர் ட்ரோய்க்கி(Viktor Troicki) மோதினர்.

இறுதியில் ரமோஸ் வினோலஸ் (3-6), (6-3), (6-3), (2-6), (6-3) என்ற செட் கணக்கில் விக்டர் ட்ரோய்க்கியை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். தோல்வியடைந்த விக்டர் ரோய்க்கி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், ஆட்டத்தின் போது செர்பியன் வீரர் விக்டர் ட்ரோய்க்கி போட்டியின் நடுவரான இத்தாலியை சேர்ந்த டாமியானோ டோரேல்லவை கடுமையாக வசை பாடினார்.

ஆட்டத்தின் இறுதிகட்டத்தின் போது ரமோஸ் வினோலஸ் அடித்த பந்தை ட்ரோய்க்கி தவறவிட்டார். பந்து கோட்டில் பட்டதாக கூறி நடுவர் ரமோஸிற்கு புள்ளி வழங்கினர். இதன் மூலம் ராமோஸ் முன்நிலை பெற்றார்.

இதனால். கோபமடைந்த செரிபியன் வீரர் ட்ரோய்க்கி, பந்தை நடுவரிடம் காட்டி இதில் கோட்டில் பட்ட வெள்ளை நிறம் உள்ளதா, நன்றாக பாருங்கள், நீங்கள் இந்த உலகத்திலே மிக மோசமான நடுவர் எனக்கூறி பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்தார்.

நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் பந்தை பார்க்கவில்லையா? என வசை பாடினார். பின்னர் தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் ரமோஸ் மேலும் ஒரு புள்ளி பெற்று ஆட்டத்தை கைப்பற்றினார்.

இதனைதொடர்நது ஆட்டம் முடிந்த பின்னர் ட்ரோய்க்கி நடுவருக்கு கைகொடுக்க மறுத்து மீண்டும் கடுமையாக வசை பாடினார், மேலும் இதுகுறித்து நடுவர் அலுவலகத்தில் புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments