விம்பிள்டன்: 33 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து வீராங்கனை

Report Print Arbin Arbin in ரெனிஸ்
129Shares
129Shares
ibctamil.com

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் 33 வருடத்திற்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையை கோன்டா பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று நடைபெற்றது.

இதில் இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டா, பிரான்ஸ் நாட்டின் கரோலின் கார்சியாவை எதிர்கொண்டார். 6-ம் நிலை வீராங்கனையான கோன்டாவிற்கு கார்சியா கடும் நெருக்கடி கொடுத்தார்.

இதனால் முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(7)- 6(3) என கோன்டா முதல் செட்டை கைப்பற்றினார்.

2-வது செட்டில் கார்சியா 6-4 என கார்சியா வெற்றி பெற்றார். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் கோன்டா சிறப்பாக விளையாடி 6-4 என அந்த செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் கடந்த 1984-ம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 33 வருடங்களுக்குப் பிறகு விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து வீராங்கனை என்ற பெயரை கோன்டா பெற்றுள்ளார்.

கோன்டா அரையிறுதியில் 2-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை எதிர்கொள்கிறார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments