டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் போராடி வென்ற டென்மார்க் வீராங்கனை

Report Print Kavitha in ரெனிஸ்

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி

செக் குடியரசின் பெத்ரா குவித்தோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

நேற்று நடந்த வெள்ளை பிரிவு ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் வோஸ்னியாக்கி (2வது ரேங்க்) - குவித்தோவா (4வது ரேங்க்) மோதினர்.

முதல் செட்டில் வோஸ்னியாக்கி 7-5 என வென்று முன்னிலை பெற்றார்.

இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த குவித்தோவா 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் குவித்தோவாவின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்த வோஸ்னியாக்கி 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.

இப்போட்டி 2 மணி, 19 நிமிடத்துக்கு வரை நீடித்தது.

பின் வெள்ளை பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் எலினா ஸ்விடோலினா (6வது ரேங்க், உக்ரைன்) - கரோலினா பிளிஸ்கோவா (7வது ரேங்க், செக்.) மோதி எலினா ஸ்விடோலினா 2-1 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்