எனக்கு பாதுகாப்பாக 50 மாஸ்குகள்: செரினா வில்லியம்ஸ்

Report Print Arbin Arbin in ரெனிஸ்

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார்.

அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான செரினா வில்லியம்ஸ், இரத்த உறைவு மற்றும் நுரையீரல் பிரச்னை உள்ள நிலையில் கொரோனா பரவலில் இருந்து தன்னை எப்படி காத்துக்கொள்கிறார் என்பது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், நான் தற்போது ஒரு துறவியைப் போலத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது நுரையீரல் முழு திறனுடன் செயல்படுவதில் பிரச்னை உள்ளது.

அதனால் எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. நான் தற்போது நலமாகத்தான் இருக்கிறேன்.

ஆகஸ்ட் 31 முதல் - செப்டம்பர் 13 வரை நடக்கும் அமெரிக்க டென்னிஸ் போட்டியில் நான் பங்கேற்க இருக்கிறேன்.

டென்னிஸ் விளையாடுவது மகிழ்ச்சிகரமான விடயமாக இருந்தாலும், அங்கு செல்வதற்கான பயணத்தை நான் அவ்வளவு சாதரணமாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. பயணத்தின்போது என்னைப் பாதுகாத்துக் கொள்ள 50 மாஸ்குகள் தேவைப்படும் என கருதுகிறேன்.

டென்னிஸ் விளையாடுவது ஒரு புறம் இருந்தாலும், எனது உடல்நலனுக்கும், வாழ்விற்கும் மிக முக்கிய பிரதான இடத்தைக் கொடுக்கவே இப்படி ஒரு துறவி போல இருக்கிறேன் என்றார் அவர்.

38 வயதான செரினா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்