நெருப்பு பிழம்பான வாகனம்: பதறியடித்து வெளியேறிய வாகன ஓட்டிகள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
நெருப்பு பிழம்பான வாகனம்: பதறியடித்து வெளியேறிய வாகன ஓட்டிகள்

பிரித்தானியாவில் டார்ட்ஃபோர்ட் சுரங்கப்பாதையில் வாகனம் ஒன்று திடீரென்று நெருப்பு பிழம்பாக மாறவே அந்த பகுதியில் இருந்த வாகன ஓட்டிகள் பதறியடித்துக்கொண்டு வெளியேறியுள்ளனர்.

கென்ட் பகுதியில் அமைந்துள்ள டார்ட்ஃபோர்ட் சுரங்கப்பாதையில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

மதிய வேளை ஒரு மணி இருக்கும் அப்போது டார்ட்ஃபோர்ட் சுரங்கப்பாதையில் வாகன ஓட்டிகள் விரைந்து கொண்டிருந்தனர். திடீரென்று அதில் ஒரு வாகனத்தில் இருந்து நெருப்பு வெடித்துக் கிளம்பியுள்ளது.

இதனால் அதிர்ச்சியுற்ற எஞ்சிய வாகன ஓட்டிகள் வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என்ற அச்சத்தில் அங்கிருந்து பதறியடித்துக்கொண்டு ஓட்டமெடுத்துள்ளனர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் கலவர பகுதி போல காட்சி அளித்தது. இச்சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட ஒருவர், தமக்கு முன் நின்ற கார் ஒன்று திடீரென்று நெருப்பு கோளமாக மாறியது அச்சமூட்டுவதாக இருந்தது என்றுள்ளார்.

இந்நிலையில் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், துரிதமாக செயல்பட்டு நெருப்பை அணைத்தனர்.

இதனால் அடுத்துள்ள வானகங்களில் நெருப்பு படராமல் தவிர்க்கப்பட்டது. இதனிடையே தங்களது வாகனங்களை விட்டு விட்டு பதறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள் சிறிது தூரம் சென்ற பின்னர் திரும்பி வந்துள்ளனர்.

நிலைமை சீரானதை அடுத்து தீயணைப்பு குழுவினர் திரும்பிச் சென்றனர். இதையடுத்து வாகனங்கள் வழக்கம் போல சுரங்கப்பாதை வழி செல்லத்துவங்கியது.

இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments