தேனிலவுக்கு சென்ற பெண்ணுக்கு விமான நிலையத்தில் நேர்ந்த விபரீதம்!

Report Print Jubilee Jubilee in பிரித்தானியா

தேனிலவுக்காக சென்ற இளம்பெண் ஒருவரிடம், பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த பைசா ஷாஹீன் என்பவருக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இவர் தனது கணவருடன் தேனிலவுக்காக துருக்கி சென்றிருந்துள்ளார். துருக்கி சென்று தனது பயணத்தை சிறப்பாக முடித்துவிட்டு, தாயகம் திரும்புகையில் விமானத்தில் வைத்து துருக்கி இலக்கியமான Syria Speaks: Art and Culture from the Frontline என்ற நூலை படித்து வந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த விமான பயணிகள் சிலர், தீவிரவாதியாக இருக்கலாம் என கருதி பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பாதுகாப்பு படையினர் தெற்கு யார்ஷயரில் உள்ள டன்காஸ்டர் விமானநிலையத்தில் ஷாஹீன் ஐ மடக்கி பிடித்து, தீவிரவாத சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். நீண்ட விசாரணைக்கு பின் இப்பெண் விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து ஷாஹீன் கூறியதாவது, ஒரு நாட்டிற்கு பாதுகாப்பு என்பது அவசியமானது தான், அதற்காக புத்தகம் படித்தால் கூட விசாரணை நடத்தப்படுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments