ஆண்டி முர்ரே கிளப்பில் சேர கடும் போட்டி!

Report Print Basu in பிரித்தானியா

ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான ஆண்டி முர்ரே முக்கிய உறுப்பினராக திகழ்ந்து வரும் wonderush என்னும் புக்கிங் சேவை கிளப்பில் உறுப்பினர்களாக கடும் போட்டி நிலவி வருகிறது.

4000 சந்தாதாரர்களை கொண்டுள்ள இந்த ஆன்லைன் கிளப் தற்போது லண்டனில் பிரத்தியேகமாக இயங்கி வருகிறது. கிளப்பின் நிதியை சுமார் 2,00, 000 யூரோவாக உயர்த்தும் நோக்கத்தில் கிளப் நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர்.

கிளப் சார்பாக லண்டனில் நடக்கும் எண்ணற்ற நிகழ்ச்சிகள், வகுப்புகள் மற்றும் வாழ்க்கை முறை அனுபவங்களில் Wonderush சந்தாதாரர்கள் புக் செய்துக் கலந்துக்கொள்ளலாம், உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணம் கிடையாது.

கிளப் சார்பாக தலைநகர் முழுவதும் சுமார் 1000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது. கடந்த வாரம் மூன்று மணிநேரத்தில் சுமார் 1,50,000 நிதிதிரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு லண்டனில் அடிப்படையாக செயல்பட்டு வரும் இந்த கிளப்பிற்கு, MyVoucherCodes நிறுவனர் மார்க் பியர்சன் அமைத்துள்ள investment fund Fuel Ventures மூலம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்துள்ளவர்களில் ஆண்டி முர்ரேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இணை நிறுவன்ர மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நெல்சன் சிவலிங்கம் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக லண்டனில் சிறப்பாக கட்டமைத்து உள்ளோம். பிற நகரங்களிலும் நிறுவ நிதி திரட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments