ரஷ்யாவுக்கு எச்சரிக்கை.. சக்தி வாய்ந்த போர் கப்பலை அனுப்பிய பிரித்தானிய பிரதமர்: அமெரிக்காவுக்கு மிரட்டலா?

Report Print Santhan in பிரித்தானியா
589Shares
589Shares
lankasrimarket.com

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதித்த காரணத்தினால் பிரித்தானிய பிரதமர் தெரசா மே முதல் முறைய தங்கள் நாட்டின் சக்தி வாய்ந்த போர்க்கப்பல் ஒன்றை கருங்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றவுடன் உலக நாடுகள் அனைத்தும் எச்சரிக்கையுடனே செயல்பட்டு வருகின்றன. டிரம்ப் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் ஏதேனும் ஒரு நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் டிரம்ப் அண்மையில் தொலைபேசியில் விவாதித்துள்ளனர். அப்போது அமெரிக்க- ரஷ்யா ஆகிய 2 நாடுகளும் சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவது என்றும் குறிப்பாக சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் சில தீவிரவாத அமைப்புகளை அடக்கி ஒடுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு, மற்றும் அரபு-இஸ்ரேல் மோதல். அணு ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் ஈரான் அணுசக்தி திட்டம். வட மற்றும் தென் கொரியா பிரச்னை. உக்ரேனில் உள்ள நிலைமை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் தெரசா மே தங்கள் நாட்டின் சக்தி வாய்ந்த HMS Diamond என்ற போர்க்கப்பலை கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளை மையமாகக் கொண்ட கருங்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

உலக நாடுகளில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் பிரித்தானியாவுக்கு பெரும் பங்கு உண்டு எனவும், உக்ரைனின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் பட்சத்தில் பிரித்தானியா உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பது உறுதி என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments